Monday, December 28, 2020

லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்றுகிறோம் என்று சமூகத்தில் பிரிவினை ஏற்படுத்துகின்றனர்: பாஜக மீது கே.சி.தியாகி விமர்சனம்

உத்தரப் பிரதேசத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் லவ் ஜிகாத் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.




திருமணத்துக்காக மதம் மாறுவதற்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டு வரும் நிலையில் பிஹாரில் பாஜக கூட்டணியுடன் ஆளும் ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகியோ இதனை எதிர்த்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசியச் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த தியாகி கூறுகையில், “லவ் ஜிஹாத் என்ற பெயரில் சமூகத்தில் வெறுப்புணர்வையும் துவேஷத்தையும் ஏற்படுத்தி பிரிவினைப்படுத்தி வருகின்றனர்.

இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியக் கொள்கைகளில் உரிய வயதுத் தகுதி உடைய இரண்டு பேர் அவரவர்களது வாழ்க்கைத் துணையை எந்த ஒரு மத, சாதிப் பாகுபாடு இல்லாமல் தேர்வு செய்ய சுதந்திரம் உடையவர்கள் என்று கூறுகிறது.

ராம் மனோகர் லோஹியா காலத்திலிருந்தே சாதி மத பேதமற்ற திருணமணங்களை சோஷலிஸ்ட்கள் நடத்தி வைத்துள்ளனர், அதற்கான உரிமையையும் நிலைநாட்டியுள்ளனர்” என்று லவ் ஜிகாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் இந்த சட்டம் அமலாக்கம் பெற்று வேறு மதங்களைச் சேர்ந்த ஆண்/பெண் சேர்ந்து நடந்து சென்றாலோ, பேசிக்கொண்டிருந்தாலோ கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் திருமணத்துக்காக மதம் மாறினாலோ, அல்லது மோசடியாக மதம் மாற்றப்பட்டாலோ 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கக்கூடிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.உத்தரப் பிரதேசத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் லவ் ஜிகாத் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதாவது வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வதற்கான சுதந்திரத் தெரிவு உரிமையையும் மதம் மாறுவதற்கான ஜீவாதார உரிமையையும் இந்தச் சட்டம் பறிப்பதாக பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

-பிடிஐ தகவல்களுடன்..

 






CURRENT POST

Loading…

TOP POPULAR POST