சிதம்பரம் நடராசர் கோயில்
கோயில் அமைப்பு
சிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை பெய்தது
வடிவமைப்பு
மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையிரல் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.
கோபுரங்கள்
இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.
இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
மண்டபங்கள்
இக்கோவிலில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் விஜயநகர பேரரசின் கீழ் ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் அமைத்தார்கள்.
சந்நிதிகள்
விநாயகர் சந்நிதிகள்
முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் என பல்வேறு விநாயகர் சந்நிதிகள் இக் கோயிலில் அமைந்துள்ளன.
சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் இருப்பதை இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரே கூறினார் என தொன்மமொன்று உள்ளது.
நவகிரக சந்நிதிகள்
பதஞ்சலி சன்னதி -
கம்பத்து இளையனார் சந்நதி -
கோவில்கள்
சிதம்பரம் நடராசர் கோவிலில், கோவிலுக்குள் பல்வேறு கோயில்கள் அமைந்திருக்கின்றன.
சிவகாமசுந்தரி அம்மன் கோவில் - மூன்றாவது பிரகாரத்தில் வடக்குப் பகுதியில் சிவகாமசுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த சன்னதி அருகே யமன் மற்றும் சித்திரகுப்தனுக்கு சிலைகள் அமைந்துள்ளன.
கோவிந்த ராஜபெருமாள் கோவில் -
பாண்டிய நாயகர் கோவில் - சிவகாம சுந்தரி கோவிலின் வடக்கே, பாண்டிய நாயகர் கோவில் அமைந்துள்ளது. இது முருகன் கோவிலாகும். இக்கோவிலில் ஆறுமுகம் கொண்ட முருகன், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் உள்ளார்.
நவலிங்க கோவில் - நவகிரகங்களால் வழிபடப்பட்ட இலிங்கங்கள் உள்ள கோவிலாகும்.
சபைகள்
சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ளன.[7] பேரம்பலம் என்பது தேவசபை என்றும், நிருத்த சபை என்பது நடனசபை என்றும், கனகசபை என்பது பொன்னம்பலம் எனவும் அறியப்பெறுகிறது.
No comments:
Post a Comment