சிதம்பரம் கோவிலில் அமைந்துள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்யும் அதிசயம் நிகழ்ந்ததாக 36 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவிலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக தமிழ் செய்தி ஊடகங்களும் செய்தியாகவே வெளியிட்டு இருக்கின்றனர்.
சிலையின் மீது மழை பெய்யும் காட்சியை அதிசய நிகழ்வு எனக் கூறி சமூக வலைதளத்தில் ஆயிரக்கணக்கில் வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ? சிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்ததாக இப்படியொரு வீடியோ வைரலான உடன் யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் அங்கு நேரில் சென்று வீடியோ எடுத்ததாக நமக்கு ஓர் வீடியோ அனுப்பி இருந்தார். அந்த வீடியோவில், சிலை அமைந்து இருக்கும் மண்டப பகுதிக்கு முன்பாக மற்றும் அதைச் சுற்றி மழை பெய்வதை காண முடிந்தது.
No comments:
Post a Comment